தொழிற் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தர்ணா போராட்டம்

பெரம்பலூர், ஜன.24: பெரம்பலூரில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு, தொழிற்சங்க நிர்வாகிகள் அகஸ்டின், ரெங்கசாமி, குமார், சின்னசாமி, ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் செல்லதுரை, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். டெல்லியில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோர் கோஷமிட்டனர். இதில் ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் சண்முகம், பொது தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ரெங்கநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, கருணாநிதி, ரெங்கராஜ், செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>