சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சற்று தமிழக கடலோரத்துக்கு நெருங்கி வந்துள்ளது. இதன் காரணமாக வட கடலோரத்தில் நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் கூடுதல் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக 100 மிமீ பெய்துள்ளது. தென் மாவட்டங்கள் மேற்கு மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும். டெல்டாவில் நேற்று மழை பெய்துள்ள நிலையில் இருகாற்று மற்றும் மேகக் குவியல் இணைப்பின் காரணமாக சற்று வடக்கே நேற்று இரவு முன்னேறியது. தற்போது சென்னை கடலோரத்தில் இருந்து சென்னைக்குள் வந்துள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அதிகபட்சமாக நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரையில் 100 மிமீ வரை மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் 54 மிமீ திருக்கழுக்குன்றம் 15 மிமீ, திருப்போரூர், கேளம்பாக்கம் பகுதிகளில் மழை பெய்துள்ளது சென்னை, திருவள்ளூர் பகுதியில் சில இடங்களில் கனமழை மிக கனமழையும் பெய்துள்ளது.
சென்னை திருவிக நகர் 107 மிமீ, கத்திவாக்கம் 74 மீமி, விம்கோநகர் 64 மிமீ, அண்ணா நகர் 55 மிமீ, மணலி 45, வளசரவாக்கம் 42மிமீ, கொளத்தூர் 39 மிமீ, நெற்குன்றம் 36மிமீ, பாரி முனை 36 மிமீ, அமைந்தகரை 30 மிமீ, சென்ட்ரல் 19 மிமீ, ஐஸ்அவுஸ் 15 மிமீ, நுங்கம்பாக்கம் 12 மிமீ, திருவொற்றியூர் 11 மிமீ, சைதாபேட்டை, பெரம்பூர் 10 மிமீ மழை பெய்துள்ளது. சோழிங்க நல்லூர், திருவான்மியூர் பகுதிகளில் காலையில் மழை பெய்துள்ளது. இன்று மதியத்துக்கு பிறகு மேற்கு மாவட்டங்களில் மழை பெய்யும். ஆங்காங்கே மழை பெய்து கொண்டுள்ள நிலையில், பழவேற்காடு, கடலோர பகுதிகளில் தொடர்ச்சி தூறல் தென்சென்னையில் மழை பெய்கிறது. மாமல்லபுரம் தொடங்கி மரக்காணம் வரை மழை பெய்கிறது.
திருவண்ணாமலை காஞ்சிபுரம் மாவட்டங்கிளல் நேற்று மழை பெய்துள்ளது. குறிப்பாக 75 மிமீ மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றும் காலையில் இருந்து மழை பெய்யத் தொடங்கியுள்ளது. டெல்டாவில் இன்று மழை விலகும் நிலை உள்ளது. இதையடுத்து, 8ம் தேதி முதல் 12ம் தேதி வரையில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும். நேற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் 69 மிமீ மழை பெய்துள்ளது.
தென்சென்னை, செங்கல்பட்டு, காரைக்கால் மயிலாடுதுறை, ராமநாதபுரம் புதுக்கோட்டை, பகுதிகளில் ஆங்காங்கே இன்றும் மழை பெய்யும். திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி சென்னை,வழியாக தெற்கு நோக்கி மேகமூட்டம் செல்வதால் தெற்கு பகுதியில் இன்று மதியம் பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலைக்கு பிறகு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி, மேற்கு மாவட்ட பகுதி மழை பெய்யும். திருச்சி, கோவை ஈரோடு, பகுதிகளிலும் இன்று மாலையில் மழை பெய்யும். வெப்பம் உயரும் இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. நேற்று வெயில் உயர்வின் காரணமாக கிழக்கு காற்று குவிதல் ஏற்பட்டதால் மழை பெய்தது.
