×

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி மெட்ரோ ரயில் இயக்கம்

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : English New Year ,Chennai ,Metro Rail Administration ,Metro ,
× RELATED 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான...