சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கரூர், ஜன. 24: சுபாஸ் சந்திரபோஸின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் சங்கம் சார்பில் திருவூருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கருர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள அவரின் திருவூருவ சிலைக்கு சங்கத் தலைவர் அவினாசிலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் காமராஜ், ராதாகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் சார்பிலும் திருவூருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>