×

டாஸ்மாக் அருகில் மது குடிப்பவர்கள் போட்டு செல்லும் பிளாஸ்டிக்கால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு


கரூர், ஜன. 24: டாஸ்மாக் கடைகளின் அருகிலேயே சரக்கடிக்கும் குடிமகன்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவது குறித்து கவனித்துக் கொள்வார்களா? என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. கொரனோ பரவலை முன்னிட்டு பல மாதங்களாக பார்கள் செயல்படாமல் இருந்தது. இதனால், பெரும்பாலான டாஸ்மாக் கடைகளின் அருகிலேயே குடிமகன்கள் சரக்குகளை வாங்கி அந்த பகுதியிலேயே பாட்டில்கள், பிளாஸ்டிக் போன்றவற்றை போட்டுச் சென்றனர். இதனால், விவசாய நிலங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின.

கடந்த சில வாரங்களாக டாஸ்மாக் கடைகளின் அருகில் பார்கள் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், பார்கள் செயல்பாட்டில் இருந்தாலும், தாந்தோணிமலை, ராயனூர், வெங்ககல்பட்டி போன்ற காட்டுப்பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை சுற்றிலும் உள்ள விவசாய நிலங்களில் அதிகளவு குடிமகன்கள் சரக்குகளை வாங்கி அமர்ந்து சாப்பிட்டு விட்டு அனைத்து பொருட்களையும் அப்படியே விவசாய நிலங்களில் போட்டுச் செல்வதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதோடு, நிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கரூர் நகரப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து கண்காணித்து தேவையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : lands ,Tasmag ,
× RELATED கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன்...