அதிகாரிகள் கண்காணிக்க கோரிக்கை அமராவதி ஆற்றில் மண்டிக்கிடக்கும் சீத்தைமுட்செடிகளை அகற்ற வேண்டும்.

கரூர், ஜன. 24: கரூர் அமராவதி ஆற்றில் படர்ந்துள்ள சீத்த முட்செடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகரப்பகுதியின் வழியாக அமராவதி ஆறு செல்கிறது. கரூர் சின்னாண்டாங்கோயில், படிக்கட்டுத்துறை, லைட்ஹவுஸ் கார்னர், பசுபதிபாளையம் போன்ற முக்கிய பகுதிகளின் வழியாக அமராவதி சென்று திருமுக்கூடலு£ரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில், கரூர் நகரப்பகுதியின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் பெரும்பாலான பகுதிகளில் ஆற்றின் போக்கை மாற்றும் வகையில் அதிகளவு முட்செடிகளும், சீத்த முட்செடிகளும் வளர்ந்துள்ளன. இதுபோன்ற செடிகள் ஆற்றின் போக்கை மாற்றுவதோடு, பல்வேறு சுகாதார சீர்கேடுகளையும் ஏற்படுத்தும் என்பதால் சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் சீத்த முட்செடிகள் பொக்லைன் மூலம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது திரும்பவும் அமராவதி ஆற்றுப்பகுதியை சுற்றிலும் சீத்த முட்செடிகள் வளர்ந்துள்ளன. எனவே, இதனை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

>