மக்கள் எதிர்பார்ப்பு வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தர்ணா போராட்டம்

கரூர், ஜன. 24: கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட நிர்வாகி அண்ணாவேலு தலைமை வகித்தார். இதில், எல்பிஎப், ஐஎன்டியூசி, சிஐடியூ, ஏஐசிசிடியூ உட்பட அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது, தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

Related Stories:

>