ஊட்டி: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை ஊட்டிக்கு வந்தார். ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்கி உள்ளார். நாளை, சென்னையில் குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்கிறார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, 3ம் தேதி மீண்டும் ஊட்டி வருகிறார்.
ராஜ்பவனில் ஓய்வு எடுக்கும் கவர்னர் 4ம் தேதி சென்னை திரும்புகிறார். நீலகிரி மாவட்டத்தில் இவர், தங்கும் 4 நாட்களில் அரசு மற்றும் தனியார் விழாக்களில் கலந்து கொள்வது குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இன்று அவர், ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட வாய்ப்புள்ளது.
