சூளகிரி அருகே எருது விடும் விழா

சூளகிரி, ஜன.24:  சூளகிரி தாலுகா அயர்னப்பள்ளி ஊராட்சியில் உள்ள அலேசீபம் கிராமத்தில் எருதுவிடும் விழா நேற்று நடந்தது. விழாவில் அயர்னப்பள்ளி, அலேசீபம், உத்தனப்பள்ளி, நாகமங்கலம், லாலிக்கள், கரடிகுட்டை, பங்கனநல்லி, பருவிதீ, எனுசோனை, சீபம், உத்தனப்பள்ளி, அனுமந்தபுரம், சூளகிரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை ஊர்வலமாக கொண்டு சென்று மாடுபிடி வீரர்கள் ஓட விட்டனர். சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. எருதாட்டத்தை காண ஆந்திரா, கர்நாடகா மற்றும் சூளகிரி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடினர். உத்தனப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories:

>