×

ஆழியாறு அணையிலிருந்து ஜன.2ம் தேதி முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

 

கோவை: ஆழியாறு அணையிலிருந்து ஜன.2ம் தேதி முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், ஆழியாறு படுகை, பொள்ளாச்சி கால்வாய் ”ஆ” மண்டலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ”அ” மண்டலம் , ஆழியாறு ஊட்டுக் கால்வாய் ”ஆ” மண்டலம் மற்றும் சேத்துமடை கால்வாய் ”ஆ” மண்டலம் ஆகிய புதிய பாசனப் பகுதிகளுக்கு 02.01.2026 முதல் 17.05.2026 வரை 135 நாட்களுக்கு, உரிய இடைவெளிவிட்டு, ஆழியாறு அணையிலிருந்து 2142.00 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் மற்றும் சமமட்டக் கால்வாய் 0.000 கிலோ மீட்டரில் உள்ள மதகு வழியாக 592.00 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆகமொத்தம் 2734.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களிலுள்ள 22,332 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.

Tags : Aliyar dam ,Coimbatore ,Coimbatore district ,Anaimalai taluk ,Parambikulam Aliyar ,Aliyar basin ,Pollachi canal “ ,Vettaikaranputhur ,
× RELATED எஸ்.ஐ.ஆர்.பணிகளில் அதிமுகவினர் சரியாக...