மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

தர்மபுரி, ஜன.24: தர்மபுரி மின்வாரிய வட்டத்திற்குட்பட்ட பிரிவு மின் அலுவலகங்களில், 22 ஒப்பந்ததாரர்கள் மூலம் 1000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். இவர்கள் புதிய விதிமுறைகளை கண்டித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தர்மபுரி மின் பகிர்மான வட்ட மின்வாரிய ஒப்பந்ததாரர்கள் 22 பேர் தர்மபுரி மேற்பார்வை பொறியாளர், சென்னை தலைமை பொறியாளர், மின்வாரிய தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில், பிஎப், பிஎஸ்ஐ, ஜிஎஸ்டி போன்ற விதிகளை கடைபிடித்து பணி செய்கிறோம். தற்போது, புதிய விதிமுறைகளை அதிகாரிகள் புகுத்தியுள்ளனர். தொழிலாளர் உரிமம் பெற வேண்டும் என்ற விதிமுறைகளை, அதிகாரிகள் அமல்படுத்தியுள்ளனர். இதனை எங்களால் ஏற்க முடியாது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் வரை செய்யப்பட்ட பணிகளுக்கான பில் தொகையை பழைய முறையில் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>