சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

தர்மபுரி, ஜன.24: தர்மபுரி மாவட்டத்தில் 32வது சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. நேற்று தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தர்மபுரி, அரூர் மற்றும் பாலக்கோடு அலுவலகத்தில், பழகுநர் உரிமம், புதிய ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் போன்ற பணிகளுக்காக அலுவலகம் வந்த பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து குறும்படம் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டது. தலைகவசம் அணிவது, சீட்பெல்ட் அணிவது குறித்து, தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலக நேர்முக உதவியாளர் சாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மணிமாறன், ராஜ்குமார் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>