வீட்டின் முன்பு கோலம் போட்ட சிறுமி பலாத்காரம்

சென்னை: விருகம்பாக்கத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 14 வயது சிறுமி, தனது வீட்டு வாசலில் கோலம் போடுவதாக கூறிவிட்டு வெளியில் சென்றாள். ஆனால், நீண்ட நேரமாகியும் சிறுமி வீட்டுக்குள் வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் வெளியில் சென்று பார்த்தபோது, சிறுமியை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியபோது, சிறுமி அழுது கொண்டே வீடு திரும்பினாள். அவளிடம் விசாரித்தபோது, ‘‘கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் தன்னை வாயை பொத்தி தூக்கிச்சென்று, மறைவிடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்,’’ என கூறினாள். புகாரின்பேரில், போலீசார், விக்னேஷை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: புதுவண்ணாரப்பேட்டை அண்ணா நகரை சேர்ந்த 16 வயது சிறுமியை, டிக்டாக் செயலி மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் காதலித்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, பலாத்காரம் செய்த குரோம்பேட்டை ராதா நகரை சேர்ந்த கவுதமை (19), போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>