சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது. கூட்டணி தொடர்பான விவகாரங்கள், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்வதில் நிலவும் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
