திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம் காக்களூரில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, நிர்வாகிகள் சி.ஜெரால்டு, செயலாளர்கள் நடுக்குத்தகை ஜெ.ரமேஷ், காயத்ரி ஸ்ரீதரன், மா.ராஜி, ஜி.ஆர்.திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் வரவேற்றார். இதில் இறுதி வாக்காளர் பட்டியலை பிஎல்ஏ 2 மூலமாக ஆய்வு செய்வது, ஜனவரி 25ம் தேதி ஆவடியில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் துணை பொது செயலாளர் ஆ.ராசா சிறப்புரை ஆற்றவுள்ளார். இக்கூட்டத்தில் மாணவரணி மற்றும் திமுகவினர் அனைவரும் திரளாக கலந்துக்கொள்ளவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றிய, மாநகர, நகர, பேருர் செயலாளர்கள் பூவை எம்.ஜெயக்குமார், டி.தேசிங்கு, பூவை எம்.ரவிக்குமார், தங்கம் முரளி, என்இகே.மூர்த்தி, ஜி.ராஜேந்திரன், பேபி சேகர், ஜி.நாராயண பிரசாத், பொன்.விஜயன், புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், தி.வே.முனுசாமி, தி.வை.ரவி, ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், காக்களூர் த.எத்திராஜ், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் பிரபு கஜேந்திரன், எஸ்.மூர்த்தி, ஆர்.ராஜா, எஸ்.சங்கீதா சீனிவாசன், ஏ.ஜெ.பவுல், ஏ.ஜி.ரவி, ஒ.ஆர்.நாகூர்கனி, தொழுவூர் பா.நரேஷ் குமார், பொன்.விமல்வர்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>