கூடலூர், டிச.31: கூடலூரில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தலைமைக்காவலர் ஆனந்தவேல் தலைமையில் போலீசார், கூடலூர் அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே, சிக்கன் கடை ஒன்றில் நேற்று முன் தினம் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு சட்டவிரோதமாக விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து கூடலூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரை கைது செய்தனர்.
