தேனி, டிச.31: தேனி மாவட்டம், தேவாரத்தை சேர்ந்தவர்கள் அஜீத்குமார்(25), சிலம்பரசன்(27). இவர்கள் கடந்த 3ம் தேதி ஒரிசா மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வந்தனர். இதனையறிந்த தேவாரம் போலீசார் அஜீத்குமார் மற்றும் சிலம்பரசனை பிடித்து, 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக இவ்விருவர் மீதும், இவர்களுக்கு துணையாக இருந்த மேலும் 3 பேர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அஜீத்குமார், சிலம்பரசன் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட போலீஸ் எஸ்.பி சினேகாபிரியா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதனையேற்று கலெக்டர் ரஞ்ஜீத்சிங், இரு வாலிபர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதனையடுத்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு சிறையில் இருந்து வரும் அஜீத்குமார், சிலம்பரசன் ஆகிய 2 வாலிபர்களையும் போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.
