×

கந்தர்வகோட்டையில் கோதண்டராமர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

கந்தர்வகோட்டை, டிச.31: கந்தர்வகோட்டை கோதண்டராமர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் உள்ள இந்துசமய அறநிலைதுறைக்கு சொந்தமான கோதண்டராமர் ஆலயம் உள்ளது. தமிழக அரசால் ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது. தற்சமயம் மார்கழி மாத பூஜையும் மண்டகபடியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இறையருள் பெற தினசரி ஆயிரக்கணக்கான பக்தர் வந்து செல்லுகிறார்கள். இந்த நிலையில் மார்கழி 15ம் விடியற்காலையில் சொர்க்கவாசல் திறக்கபட்டு அதன்வழியே உற்சவரை வண்ண மலர்களாலும், பட்டுவாஸ்திரம் கொண்டும் அலங்காரம் செய்து பக்தர்கள் தோளில் சுமந்து தெரு சுற்றி ஆயிரகணக்கான பக்தர்கள் புடைசூழ ஊர்வலம் நடைபெற்றது. அனைத்து வீடுகளிலும் தேய்காய் உடைந்து சுவாமி தரிசனம் செய்தனர். கிராமபுறங்களில் இருந்து ஏறளமான மக்கள் வந்து இறையருள் பெற்றனர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப் பட்டது.

 

Tags : Kothandaram temple ,Gandharvakottai ,Kothandaram ,Hindu Religious Charities Department ,Pudukkottai ,Tamil Nadu government ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் இன்று திருப்படி திருவிழா