×

அரியலூர் தாசில்தார் அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்

அரியலூர், டிச.31: அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வி தகுதியை பட்டப்படிப்பாக மாற்றியமைக்க வேண்டும். தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலரை, சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

பதவி உயர்வை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக மாற்றம் செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அந்தஸ்துக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் குருநாதன், பொருளாளர் கார்த்திகேயன், கோட்டச் செயலர்கள் பார்த்திபன், வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Village Administrative Officers Association ,Ariyalur ,Tahsildar ,Ariyalur Taluk Office ,Village Administrative ,
× RELATED கொலைக் குற்றவாளி குண்டாசில் கைது