நூல் விலையை குறைக்க வலியுறுத்தல்

திருப்பூர், ஜன. 22: நூல் விலையை குறைக்கவேண்டும் என ஏ.இ.பி.சி., தமிழக நுாற்பாலைகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக (ஏ.இ.பி.சி) தலைவர் சக்திவேல், அனைத்து நுாற்பாலை சங்கங்களுக்கு அனுப்பிய கடிதம்: அனைத்து ஜவுளி சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் நடத்தப்பட்டு நுால் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

ஆனாலும் தமிழக நுாற்பாலைகள் நுால் விலையை கட்டுப்படுத்தவில்லை. மாறாக இம்மாதம் 1ம் தேதி, ஒசைரி நுால் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்த்தினர்.இப்போது தான், ஆயத்த ஆடை உற்பத்திக்கான ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. வர்த்தகத்தில் போட்டி அதிகரித்துள்ளது. நுால் விலை உயர்வுக்கு ஏற்ப ஆடை விலையை உயர்த்த முடியாது.

இதனால், ஆர்டர்கள் கைநழுவி போட்டி நாடுகளை நோக்கி நகரும் நிலை உருவாகியுள்ளது. கொரோனாவால் இழந்த வர்த்தகத்தை மீட்டெடுக்க, ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. நுால் விலையை மறு பரிசீலனை செய்து குறைக்க வேண்டும். கடந்த டிசம்பர் மாதம் இருந்த நுால் விலையை தொடர செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

>