பனியன் நிறுவன தொழிலாளர்கள் பஞ்சப்படி உயர்வை கேட்டுப் பெற வேண்டும்

திருப்பூர், ஜன. 22: திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர் பஞ்சப்படியை கேட்டுப்பெற வேண்டுமென சிஐடியு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. சிஐடியு பனியன் சங்க பொதுசெயலாளர் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2020 நவம்பர் மாத சென்னை விலைவாசி புள்ளி  36,530 ஆக உயர்ந்துள்ளது. எனவே அதன் அடிப்படையில் கணக்கிட்டால் பனியன் தொழிலாளர்களுக்கு  பஞ்சப்படியாக மட்டும் ஷிப்ட் ஒன்றுக்கு ரூ.165.34  வரும். எனவே பீஸ்ரேட், ஷிப்ட் ரேட், கான்ட்ராக்ட் என அனைத்து பிரிவு பனியன் தொழிலாளர்களும் அதிகரித்த பஞ்சப்படியைக் கேட்டு பெற  வேண்டும். பஞ்சப்படி உயர்வை வழங்காத கம்பெனிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் உடனே சிஐடியு சங்கத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories:

More