போலீஸ்காரர் பைக் மோதி பனியன் தொழிலாளி பலி

திருப்பூர், ஜன. 22: திருப்பூரில் போலீஸ்காரர் ஓட்டி சென்ற பைக் மோதியதில் பனியன் தொழிலாளி இறந்தார்.திருப்பூர் ரூரல் போலீஸ் ஸ்டேஷனில் நுண்ணறிவு போலீஸ்காரராக நிர்மல்(38) பணியாற்றி வந்தார். இவர் கடந்த 17ம் தேதி இரவு ஸ்டேஷனில் இருந்து பைக்கில் ராக்கியாபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திடீரென ரோட்டை கடந்த, அதே பகுதியை சேர்ந்த பனியன் தொழிலாளியான ராமன்(39) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக பைக் மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பனியன் தொழிலாளி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More