பேட்டரியில் மின்கசிவால் தீ லோடு ஆட்டோ எரிந்து சேதம்

திருச்சி, ஜன.22: திருச்சி பீமநகர் கூனி பஜாரை சேர்ந்தவர் முகமதுசலீம் (44). இவர் நேற்றுமுன்தினம் இரவு காந்திமார்க்கெட்டில் மொத்தமாக காய்கறி வாங்குவதற்காக லோடு ஆட்டோவில் சென்றார். ஆட்டோவை அஞ்சுமன் பஜாரில் உள்ள திருமண மண்டபம் அருகே நிறுத்தி இருந்தார். அப்போது ஆட்டோவின் முன்பகுதியில் இருந்து புகை வந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இதுகுறித்து முகமதுசலீம் அளித்த புகாரின்பேரில் காந்திமார்க்கெட் எஸ்ஐ ரமேஷ் வழக்குப்பதிந்து, ஆட்டோவில் தீ விபத்துக்காரணம் குறித்து விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில், பேட்டரி மூலம் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories:

More
>