மணப்பாறை அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டெருமை

மணப்பாறை, ஜன.22: திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கருப்பு ரெட்டியப்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட, காவல்காரன்பட்டி, மலையாண்டி கோவில் பகுதியில் வனமும், அதனை ஒட்டி தோட்டங்களும் நிறைந்துள்ளதால், காட்டெருமை, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், நேற்று இரண்டு வயதுடைய ஆண் காட்டெருமை, வனத்துறையினர் காட்டெருமைகள் தண்ணீர் அருந்த கட்டப்பட்ட குடிநீர் தொட்டி அருகே இறந்து கிடந்துள்ளது. நேற்று காலை, தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள், இது குறித்து மணப்பாறை வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மணப்பாறை வனச்சரகர் மகேஸ்வரன், வனவர் விடுதலை செல்வி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டெருமை இறந்து கிடந்ததை உறுதி செய்தனர். பின்னர், கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தப்பின், அதே பகுதியில் காட்டெருமை புதைக்கப்பட்டது. நோய்வாய்பட்டு காட்டெருமை இறந்ததாக கூறப்படுகிறது.

Related Stories:

>