கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொட்டியம், ஜன.22: அரசு ஊழியர்களாக்க வேண்டும், முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளருக்கு 5 லட்சமும் வழங்க வேண்டும் என 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி. தொட்டியத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் தொட்டியம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி, செயலாளர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தொட்டியம் வட்டத்தை சேர்ந்த அனைத்து ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்றனர். துணைச்செயலாளர் கனகஜோதி வரவேற்றுப் பேசினார். ஒன்றிய பொருளாளர் புவனேஸ்வரி நன்றி கூறினார். துறையூர்: துறையூரில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டத்தில் செயலாளர் சாந்தி, பொருளாளர் பாப்பாத்தி மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் ஜனவரி 29ல் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாகவும், பிப்ரவரி 5ல் சென்னையிலும் போராட்டம் தொடரும் என கூறினர்.

திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே காட்டூரில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திருவெறும்பூர் ஒன்றிய தலைவி லீலாவதி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கலாவதி முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்களது கோரிக்கை மனுவை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பணி பரிமளாவிடம் வழங்கினர். இதில் சத்துணவு சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் | தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்க பொறுப்பாளர் ராணி, முன்னாள் மாவட்ட பொருளாளர் சத்யா, பொருளாளர் ராணிஉட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>