மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலம் இழப்பீடு தொகையை பெற்றுத்தருவோம்

திருத்துறைப்பூண்டி, ஜன.22: திருத்துறைப்பூண்டி தாலுகா வடகாடு கோவிலூர், கள்ளிக்குடி, எடையூர், சிங்களாந்தி ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை தமிழக வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சேதமடைந்துள்ள பயிர்களின் நிலை குறித்து வேளாண் துறை அதிகாரிகளிடமும், விவசாயிகளிடமும் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழக அரசின் உத்தரவின்படி சேதமடைந்துள்ள பயிர்கள் வேளாண் துறை மூலம் கணக்கிடப்பட்டு ஜன29ம் தேதிக்குள் வருவாய் நிர்வாக ஆணையரிடம் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. மேலும் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலம் முழுமையாக இழப்பீட்டு தொகையை பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகள் விவசாயிகளின் பக்கமே உள்ளோம். இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலம் உரிய இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தருவோம் என தெரிவித்தார். ஆய்வின்போது கலெக்டர் சாந்தா, வேளாண் துறை இணை இயக்குனர் சிவக்குமார் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories:

>