மாற்றுக்கட்சியிலிருந்து விலகிய 150 பேர் திமுகவில் ஐக்கியம்

வலங்கைமான், ஜன.22:  வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் மாற்று கட்சியிலிருந்து திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஊராட்சி தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது. பூந்தோட்டம், மாத்தூர், ஆலங்குடி, பாப்பாகுடி, பூனஇருப்பு, திருவோணமங்கலம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சியினர் 100 பெண்கள் உட்பட 150 பேர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

Related Stories:

>