மதுபோதையில் நண்பரை சுட்டுக்கொல்ல முயன்றவர் கைது

பாலக்காடு, ஜன.22:  கொழிஞ்சாம்பாறையை அடுத்த வண்ணாமடை நடராஜா கவுண்டர் காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ் (55). இவரின் நண்பர் வண்ணாமடை ஆறாம்மைலைச் சேர்ந்தவர் அருண்பிரகாஷ். அருண்பிரகாஷின் பொங்கல் திருவிழாவிற்கு தனது ஊருக்கு நாகராஜை அழைத்துள்ளார். கடந்த 15 ம்தேதி அன்று இருவரும் மதுகுடித்துள்ளனர். குடிபோதையில் இருந்த நாகராஜை அருண்பிரகாஷ் சாப்பிட அழைத்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த நண்பரை நாட்டுத் துப்பாக்கியால் அருண்பிரகாஷ் சுட்டுக்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதில் காயமடைந்த நாகராஜை உடனடியாக கோழிப்பாறையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கொழிஞ்சாம்பாறை போலீசாருக்கு  தகவல் கிடைக்கவே இன்ஸ்பெக்டர் அஜித்குமாரின், எஸ்.ஐ., அன்ஷாத் ஆகியோர் தலைமையில் போலீசார் அருண்பிரகாஷ் வீட்டை சோதனையிட்டனர் அப்போது, இரண்டு ஏர்பிஸ்டல்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அருண்பிரகாஷை கொழிஞ்சாம்பாறை போலீசார் கைது செய்து சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>