பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா

ஊட்டி,ஜன.22: ஊட்டி அருகேயுள்ள தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாதன் முன்னிலை வகித்தார். விழாவில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் கப்பச்சி வினோத் கலந்துக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி உரையாற்றினார். விழாவில், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் தர் உட்பட அரசு அலுலவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.

முடிவில், பட்டதாரி ஆசிரியர் காய்த்ரி நன்றி கூறினார். பந்தலூர்: பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது தலைமை ஆசிரியர் தண்டபாணி தலைமை வகித்தார்.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் கணேசன் வரவேற்றார். கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி கலந்துகொண்டு மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி, ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>