மக்கள் பணிகளை செய்ய தடை ஏற்பட்டால் தற்கொலை செய்வேன்

பந்தலூர்,ஜன.22: மக்கள் பணிகளை செய்வதற்கு தடை ஏற்பட்டால் தற்ெகாலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்த கவுன்சிலர் மயங்கி சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சியின் மாதாந்திர கூட்டம் நேற்று ஊராட்சி தலைவர் லில்லி எலியாஸ் தலைமையில் ஊராட்சி அலுவலகத்தில்  நடைப்பெற்றது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.செயலாளர் சஜீத் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வரும்மாறு:

கோபால்(5வது வார்டு) பேசுகையில்:  குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறுவதில்லை. ஊராட்சி பகுதியில் நடைபெறும் பணிகள் குறித்து உறுப்பினர்களுக்கு தெரிவதில்லை.தெருவிளக்குகளை முறையாக பராமரிக்கவேண்டும். மன்ற கூட்டம் நடைபெறும்போது ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர்கள் கலந்துகொள்ளவேண்டும். இவ்வாறு கோபால் பேசினார்.

சதாசிவம்(8வது வார்டு) பேசுகையில்:  குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தவில்லை என்றால் மன்ற கூட்டத்தை  விட்டு வெளிறுவேன் என்றார்.

சுப்பிரமணியம் (7வது வார்டு)பேசுகையில்:  100 நாள் வேலைத்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. அதனை முறைப்படுத்தி தேவையான பணிகளை செய்ய வேண்டும் என்றார். வினோத்கண்ணா(9வது வார்டு) பேசுகையில்: இது கண்துடைப்பு கூட்டம். வளர்ச்சி பணிகள்  எதுவும் செய்ய முடிவதில்லை. வரும் வளர்ச்சிப்பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் தடுத்து  நிறுத்துகிறார். கவுன்சிலர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு தலைவர் தடைபோடுகிறார்.

அபாயகரமான மரங்களை வெட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை. மக்களுக்காக பணி செய்திட வந்த எனக்கு மக்கள் பணிகளை செய்வதற்கு தடை ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வேன்.என பேசினார். சிறிது நேரத்தில் இறுக்கையில் இருந்தவர் மயங்கி கீழே விழுந்தார் அதனால் பரபரப்பு ஏற்பட்டது. பிற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர்.ரத்த அழுத்தம் உயர்ந்ததன் காரணமாக அவர் மயங்கி சரிந்தது தெரிய வந்தது. ஊராட்சி மன்ற கூட்டத்தின் போது தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறி மிரட்டிய கவுன்சிலர் மயங்கி சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>