ரோஜா பூங்காவில் மலர் செடிகளுக்கு இயற்கை உரமிடும் பணிகள் மும்முரம்

ஊட்டி,ஜன.22: ஊட்டி ரோஜா பூங்காவில் கவாத்து செய்யப்பட்ட செடிகளுக்கு இயற்கை உரமிடும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சிக்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கடந்–்த மாதம் டெரஸ் பெட் பகுதிகளில் உள்ள ரோஜா செடிகள் கவாத்து செய்யப்பட்ட நிலையில், அவைகளை பராமரிக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

நாள் தோறும் கவாத்து செய்யப்பட்ட செடிகளுக்கு பஞ்சா காவியம் எனப்படும் இயற்கை உரம் தெளிக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தவிர பூங்காவில் உள்ள செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணிகளும் தற்போது துவங்கி நடந்து வருகிறது. மேலும், பூங்காவில் உள்ள அலங்கார செடிகள் பனியில் கருகாமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு மூடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories:

>