கஞ்சா விற்ற வாலிபர் கைது

கோவை, ஜன.22:   கோவை ரத்தினபுரி செல்லப்பன் வீதியை சேர்ந்தவர் விக்னேஷ் (26). இவர் அதே பகுதியில் கஞ்சா பொட்டலம் விற்பனை செய்து கொண்டிருந்தார். ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இவரை கைது செய்தனர். இவரிடம் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விக்னேஷ் ஏற்கனவே சிலமுறை கஞ்சா விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமீனில் இவர் வெளியே வந்து மீண்டும் கஞ்சா விற்பனை தொழில் செய்து வந்தார்.  பல்வேறு திருட்டு வழக்குகளில் இவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>