அம்மாபேட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அம்மாபேட்டை,ஜன.22: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் அம்மாபேட்டை ஒன்றியம் சார்பில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்.

பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு உள்ளூர் பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.10 வருடம் பணி முடித்த உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாந்தி தலைமை தாங்கினார்.

ஒன்றிய தலைவர் அனுசுயா முன்னிலை வகித்தார். அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் எஸ்.ராஜாமணி, ஒன்றிய பொருளாளர் வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

Related Stories:

>