×

சாக்லேட் நகரில் புழுதி பறக்கும் தெருக்கள்

ராஜபாளையம், ஜன. 22: ராஜபாளையம் பகுதி தற்போது புழுதி பறக்கும் நகரமாக மாறியுள்ளது. ஆமை வேகத்தில் பாதாளச்சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறுகிறது. இதனால் தொடர்மழையால் சாலைகள் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் இணையதளங்களில் ராஜபாளையத்தை சாக்லேட் நகரம் என பெயர் வைத்து கலாய்த்து வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக வெயிலடிப்பதால் நகர் முழுவதும் மணல் புழுதி பறக்கிறது. இதனால் சாலை அருகே உள்ள உணவகங்கள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு வருகிறது. புழுதி பறப்பதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்துமா நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராஜபாளையம் நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Dusty streets ,Chocolate City ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...