தேனியில் சாலை பணியாளர் சங்க மாவட்ட கோட்ட மாநாடு

தேனி. ஜன. 22: தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்க 7 - வது கோட்ட மாநாடு தேனியில் நடந்தது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பரமேஸ்வரன் தலைமை வசித்தார். கண்ணன், ஆனந்தன், முருகையா, சக்திவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநில பொருளாளர் தமிழ் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். சாலை பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.

மாநாட்டின் போது, சாலைப்பணியாளர்களு க்கு பணி நீக்க காலத்தை 41 மாதம் பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். சார்நிலை அமைப்பு விதிகளின்படி, 35, 36 ஏ முதுநிலை பட்டியல் வெளியிட வேண்டும். இறந்துபோன சாலைப்பணியாளர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக வாரிசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் ராமமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வரதராஜன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்க மாநில துணைத்தலைவர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>