×

கடமலைக்குண்டுவில் வீதியில் தேங்கும் கழிவுநீர்

வருசநாடு, ஜன. 22: வருசநாடு அருகே கடமலைக்குண்டு கிராமத்தில் முனியாண்டி நாயக்கர் தெருவில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சாக்கடை வடிகால், சிமெண்ட் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. உரிய அடிப்படை வசதிகள் செய்து தர பலமுறை கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, இப்பகுதியில் பெய்த தொடர்மழையால் வீதிகளில் தேங்கி நிற்கும் கழிவுநீருடன், மழைநீரும் கலந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது. மேலும் தேங்கியுள்ள நீரில் கொசுக்கள் உற்பத்தி அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் இப்பகுதியில் டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ராஜா கூறுகையில், ‘எங்கள் பகுதியில் அடிப்படை வசதி கோரி கிராமசபை கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை வேண்டும்’ என்றார்.

Tags : road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...