வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி விசி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டை, ஜன. 22: மத்திய அரசு வேளாண்மை சட்டங்களை முழுமையாக தடை செய்ய கோரியும், குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை தமிழக அரசே இயற்ற வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இளந்தென்றல், மாவட்ட பொருளாளர் தங்கமுருகானந்தம், மாநில துணை செயலாளர் மோட்சகுணவழகன், பேராவூரணி தொகுதி செயலாளர் அரவிந்தகுமார், ஒரத்தநாடு தொகுதி செயலாளர் அரசமுதல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>