×

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கம்பம், ஜன. 22: கம்பம் கோம்பை சாலை தெருவில் வடக்கு காவல்நிலைய எஸ்ஐக்கள் திவான்மைதீன், விஜய் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியான நின்ற 2 பேரை பிடித்து சோதனை செய்ததில் பையில் 3 கிலோ கஞ்சா ரூ.20 ஆயிரம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் கம்பம் உலகத்தவர் தெருவை சேர்ந்த ஜெகன் (21), ராமநாதபுரத்தை சேர்ந்த சபரிவிக்னேஷ் (23) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ