ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்

பாபநாசம், ஜன. 22: பாபநாசத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாத கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதிப்பியல் தலைவர் கந்த, சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னதாக செயலாளர் துரைசாமி வரவேற்றார். கலைச்செல்வன் திருவள்ளுவர் ஆண்டு, திருவள்ளுவர் தினம் தீர்மானிக்கப்பட்டது குறித்து விளக்கினார். பொருளாளர் பொறுப்பு துரைசாமி கடந்த மாத வரவு செலவு கணக்குகளை வாசித்து உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்றார். அமிர்தராஜ் கடந்த மாத கூட்ட அறிக்கையை வாசித்தார். ராஜசேகரன் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டிய முறைகளை விளக்கினார். கூட்டத்தில் இளங்கோவன் உள்பட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>