ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பாபநாசம், ஜன. 22: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மழையால் பாதிப்படைந்த நெற் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரி பாபநாசம் தாலுகா அலுவலகம் அருகில் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமை வகித்தார். பொருளாளர் தங்கராசு, துணை செயலாளர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் காதர் உசேன், சிஐடியூ மாவட்ட செயலாளர் ஜெயபால் ஆகியோர் பேசினர். இதில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய பொருளாளர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>