புதிய செயலி குறித்து தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு

வருசநாடு, ஜன. 22: மயிலாடும்பாறை கிராமத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் புதிதாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள தீ என்ற செல்போன் செயலி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த செயலியின் நன்மைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் செல்போனுக்கு எவ்வாறு செயலியை பதிவிறக்கம் செய்வது மற்றும் அதனை அவசர காலங்களில் எவ்வாறு பயன்படுத்துவது என செயல்முறை விளக்கம் காட்டப்பட்டது. இதேபோல மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளின் போது மயிலாடும்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

>