அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜன. 22: அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க வட்டார செயலாளர் மகேஸ்வரி தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட தலைவர் முகமதலி ஜின்னா, கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் மணவாளன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Related Stories:

More
>