×

கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் 4 பேர் உயிரிழப்பு மீனவர்களின் பாதுகாப்பை இருநாட்டு அரசும் உறுதிப்படுத்த வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

புதுக்கோட்டை ஜன.22: மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குள் சென்று மீன்பிடிப்பதை இந்தியா, இலங்கை ஆகிய இருநாட்டு அரசுகளும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த மெசியா(30), .நாகராஜ்(52), சாம்(28), செந்தில்குமார்(32) ஆகிய 4 மீனவர்கள் கடந்த 18-ம் தேதி கடலுக்கு மீன்படிக்க சென்றனர்.

மறுநாள் காலையில் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு திரும்பவில்லை. இது குறித்து மீன்வளத் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது, இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து படகு மூலம் இவர்களது விசைப்படகில் இடித்து அதே இடத்திலேயே மீனவர்களுடன் படகை மூழ்கடித்தது தெரியவந்தது. இது, சக மீனவர்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை கடற்படை தீவிரமாக தேடி வந்தது. அதில், 19ம் தேதி இரவு 2 சடலங்களும், 20ம் தேதி 2. சடலம் என மொத்தம் 4 சடலங்களும் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 4 சடலங்களும் யாழ்பாணம் மறுத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதுகுறித்து முறையான விசாரனை நடத்த வேண்டும். சடலங்களை வெளிப்படைத் தன்மையோடு பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இறந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இறந்த மீனவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : fishermen ,Marxist Communist Party ,countries ,sea ,
× RELATED பாஜவோடு மறைமுக கூட்டணி நாடாளுமன்ற...