விவசாயிகளுக்கு அழைப்பு புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை, ஜன. 22: வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நேற்று நடந்தது. பொது அலுவலக வளாகத்தில் துவங்கிய பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பொது அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்த பேரணி, நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் பொது அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கீதா, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>