×

பாமகவில் இருந்தவர்களை மிரட்டி அழைத்துச் சென்றுள்ளார் அன்புமணி; தேர்தலுக்கு பிறகு ஜீரோ ஆகிவிடுவார்: அருள் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: பாமகவில் இருந்தவர்களை மிரட்டி அழைத்துச் சென்றுள்ளார் அன்புமணி என அருள் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்த ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று அன்புமணி கூறிய நிலையில் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம்,செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து கூட்டத்தில் ராமதாஸ் அறிவிப்பார் என்று ஏற்பற்கப்படுகிறது.

இந்த நிலையில், பாமக பொதுக்குழுவில் எம்.எல்.ஏ அருள் ஆவேசமாக பேசியுள்ளார். அதில், அன்புமணிக்கு எத்தனை பதவிகள் வழங்கியுள்ளார் ராமதாஸ்; அத்தனையையும் அன்புமணி மறந்துவிட்டார். பெற்ற தந்தை மீது மைக்கை தூக்கி எறியும் அன்புமணி ஒரு மகனா என்று பாமக தொண்டர்கள் கூறுகின்றனர். பாமகவில் இருந்தவர்கள் மிரட்டி அழைத்துச் சென்றுள்ளார் அன்புமணி. தேர்தலுக்கு பிறகு அன்புமணி ஜீரோ ஆகிவிடுவார். சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்துவிட்டு ரத்துசெய்தவர் அன்புமணி. அன்புமணி பக்கம் தொண்டர்கள் இல்லை, பொய்யர்களும் பொய்யர் கூட்டமும்தான் இருக்கின்றன என தெரிவித்தார்.

Tags : Anbumani ,Pamaka ,Grace ,Chennai ,Arul ,Salem Five Road ,Ramadas ,General Committee ,Executive Committee ,
× RELATED திண்டுக்கல்லில் பிரபல நகைக் கடையில் திருட்டு; ஊழியர்கள் கைது!