நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு

பொன்னமராவதி, ஜன.22: பொன்னமராவதி அருகே உள்ள நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். பொன்னமராவித அடுத்துள்ள நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அரசு விதித்த நிபந்தனைகள் படி அதற்கான பணம் மற்றும் ஆவணங்கள் கொடுத்தனர். இந்நிலையில் சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியில் வெளியிடப்பட்டது. இதில் நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தியதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய தலைவர் வைரமுத்து, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பழனியாண்டி, மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பெற்றோர் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

>