காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் உள்பட 10 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பொன்னமராவதி,ஜன.22: பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் உட்பட 10 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் கலைவாணி ஆலோசனையின்படி வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் முன்னிலையில் காரையூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சாந்தகுமர், நிர்மல் நாதன், செவிலியர் புனிதா, பகுதி சுகாதார செவிலியர்கள் லெட்சுமி காந்தம், கோட்டை திலகம், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் வீரமணி, வசந்த், முன்களப்பணியாளர்கள் செந்தில், அஞ்சலை, ஓட்டுநர் அய்யனார் என 10 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இது குறித்து கூறிய, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன், தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரும் எவ்வித பக்கவிளைவுகளுமின்றி நலமுடன் இருக்கின்றனர் என்றார். இதில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் பொது மக்களுக்கு நம்பிக்கையையுட்டும் வண்ணமாக மருத்துவர்கள், அலுவலர்கள், முன்களப் பணியாளார்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>