×

சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி பெண் காவலர்கள் பங்கேற்ற டூவீலர் விழிப்புணர்வு பேரணி


பெரம்பலூர், ஜன.22: பெரம்பலூரில் 32 வது சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன் னிட்டு, காவல் துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்பு ணர்வுப் பேரணி நடைபெற்றது. 32வது சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17ம்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறை, பெரம்பலூர் வட்டார போக்குவரத்துத் துறை ஆகியவை சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள மாவட்ட கலெ க்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து காவல் துறையினரின் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, பெரம்பலூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்றது. சாலைப் பாதுகாப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி பெண் போலீசார் மட்டுமே பங்கேற்ற இந்த பேரணியை பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா, எஸ்பி நிஷாபார்த்திபன் ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர். பாலக்கரையில் துவங்கிய பேரணி 4 ரோடு துறைமங்கலம் 3 ரோடு, கடைவீதி பழைய பஸ்டாண்டு வழியாக சென்று ரோவர் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. இப்பேரணியில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎ ஸ்பி கார்த்திகேயன், பெரம்பலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செல்வக்குமார், நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோபிநாத், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : guards ,occasion ,
× RELATED காவலாளியை சுட்டுக் கொன்ற வனத்துறையினர் 2 பேர் கைது