வேளாண் தொடர்பான குறைந்தபட்ச ஆதார விலையை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும்

பெரம்பலூர், ஜன.22: வேளாண் தொடர்பான குறைந்த பட்ச ஆதாரவிலை சட்டத் தை தமிழக அரசே இயற்றக் கோரி பெரம்பலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் தொடர்பான குறைந்தபட்ச ஆதாரவிலை சட்டத்தை தமிழகஅரசே இ யற்றக் கோரியும், மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், பெரம்பலூர் புதுபஸ்டாண்டில் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பெரம்ப லூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை வகித்தார். மாநிலச் செய லாளர் வீர செங்கோலன், நாடாளுமன்றத் தொகுதி துணைச் செயலாளர் மன் னர்மன்னன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் ஸ்டாலின், உதயகுமார், வேப்பூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர் செல்வராணி வரதராஜன், மாநில துணைச் செயலாளர் சீனிவாசராவ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் கதிரவன், மனோகரன், பாஸ்கர், பிச்சைப்பிள்ளை, இளமாறன், வெற்றியழகன் மாவட்ட அமைப்பாளர் பார் வதியம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories:

>