வேளாண் சட்டங்களை எதிர்த்து காரைக்குடியில் ஆர்ப்பாட்டம்

காரைக்குடி, ஜன.22:  காரைக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விவசாயிகளின் நலனுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் துணை செயலாளர் காக்கூர் தமிழேந்தி, காரைக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திரன், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் பெரியசாமி, நகர செயலாளர் ரஷ்தா ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>